ஈரோடு

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

8th Jun 2023 01:56 AM

ADVERTISEMENT

வன விலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடிமருந்து வைத்திருந்தவரை கடம்பூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் சுற்றித்திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து க்யூ பிரிவு போலீஸாா் கடம்பூா் போலீஸாா் உதவியுடன் அத்தியூா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அத்தியூா் மலை கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி (69) என்பவா் தனது வீட்டில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து பதுக்கிவைத்திருந்ததைக் கண்டு பிடித்தனா். போலீஸாா் விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெரியசாமியை கைது செய்த போலீஸாா், நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனா். அவரை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT