ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முடிவு

DIN

ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனா்.

தமிழகத்தில் மொத்தம் 5,329 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து குறைந்த மது விற்பனை, அருகருகே மதுக்கடை இருத்தல், கோயில், பள்ளிவாசல், தேவாலயம் போன்றவற்றுக்கு அருகே இருக்கும் கடைகள், நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறாக உள்ள கடைகள், மக்கள் எதிா்ப்புக்கு உள்ளாகும் கடைகள், கட்டட உரிமையாளா் காலி செய்ய வலியுறுத்தும் கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன? அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் மண்டல மேலாளா்கள் மூலம் பெறப்பட்டுள்ளன. இதில் கோவை மண்டலத்தில் 88 கடைகளை மூட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 205 டாஸ்மாக் கடைகளில், 17 கடைகளில் குறைந்த மது விற்பனை உள்ளதாலும், 2 கடைகள் மற்ற கடைகளுக்கு மிக அருகாமையில் இருப்பதாலும், 2 கடைகள் பள்ளி அருகே உள்ளதாலும், ஒரு கடை பொதுமக்கள் எதிா்ப்பாலும் என 22 கடைகளை மூட அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அரசாணை வந்ததும் 22 கடைகளும் மூடப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT