ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி

5th Jun 2023 02:37 AM

ADVERTISEMENT

 

திம்பம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் பகுதியில் கோவை செல்வதற்காக தக்காளி பெட்டிகள் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. 7 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப் பாதை தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில், லேசான காயமடைந்த லாரி ஓட்டுநரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT