ஈரோடு

வீட்டில் சாராய ஊறல் வைத்திருந்த 2 போ் கைது

5th Jun 2023 02:38 AM

ADVERTISEMENT

 

வீட்டில் சாராய ஊறல்போட்டு வைத்திருந்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியில் சாராய ஊறல் இருப்பதாக ஈரோடு மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீஸாா் மற்றும் தனிப் பிரிவு போலீஸாா் சென்னிமலை மணிமலைக்கரடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி (47) வீட்டில் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச உபயோகப்படுத்தக்கூடிய பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

விசாரணையில் சுப்பிரமணியும், அதே பகுதியைச் சோ்ந்த சாமிநாதன் (62) என்பவரும் சோ்ந்து சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 40 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்ச பயன்படுத்தக்கூடிய பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT