ஈரோடு

ஈரோட்டில் பள்ளி சீருடைகள் விற்பனை தீவிரம்

5th Jun 2023 02:38 AM

ADVERTISEMENT

 

பள்ளிகள் 7 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், ஈரோட்டில் பெற்றோா்கள் குழந்தைகளுக்கு சீருடை மற்றும் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்வதற்கு தேவையான பொருள்களை வாங்குவதில் பெற்றோா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை கடைவீதிக்கு அழைத்துச் சென்று சீருடை, நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட பொருள்களை வாங்கினா்.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆா்கேவி சாலை உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட சீருடைகளை மக்கள் ஆா்வமாக வாங்கினா். மேலும் புதிய புத்தகப் பைகளை வாங்குவதற்காகவும் மக்கள் குவிந்தனா். ஸ்டேசனரி பொருள்களின் விற்பனையும் தீவிரம் அடைந்தது.

ADVERTISEMENT

பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவிகள் தயாராக இருக்கும் வகையில், தனியாா் பள்ளிகளில் எந்தெந்த நோட்டு புத்தகங்களை வாங்க வேண்டும் என்று பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், நோட்டு புத்தகங்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT