ஈரோடு

ஈரோட்டில் சூறாவளிக் காற்றுடன் கனமழை:3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

5th Jun 2023 02:39 AM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால், சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

ஈரோடு மாநகா் பகுதியில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றால் விளம்பரப் பதாகைகள் பறந்தன.

பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் சுமாா் 5 ஏக்கா் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. அப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட வீட்டின் மேற்கூரைகளும் சேதமடைந்தன.

ADVERTISEMENT

பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 45 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிறபகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பவானி 31.60, அம்மாபேட்டை 30, சென்னிமலை 25.60, ஈரோடு 2.

ADVERTISEMENT
ADVERTISEMENT