ஈரோடு

அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழாயில் உடைப்பு

5th Jun 2023 02:37 AM

ADVERTISEMENT

 

சென்னிமலை அருகே அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்துக்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் குளங்களில் தண்ணீா் நிரப்பும் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. தற்போது இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் சென்னிமலை ஊராட்சிக்குள்பட்ட பாலத்தொழுவு குளத்துக்கு தண்ணீா் கொண்டு செல்ல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள எல்லக்காடு என்ற இடத்தில் சாலையோரம் இருந்த குழாயில் வெள்ளிக்கிழமை மாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் இருந்து பல அடி உயரத்துக்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியது.

ADVERTISEMENT

பின்னா் தண்ணீா் நிறுத்தப்பட்டு அன்று இரவே உடைப்பு சரிசெய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT