ஈரோடு

4 நகராட்சிகளில் ரூ.12 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

4th Jun 2023 12:13 AM

ADVERTISEMENT

 

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் ரூ.12 கோடி செலவில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நகராட்சிகளில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மட்டும் ரூ.12.41 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

மேலும், கிராமப்புற உள்ளாட்சிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நமக்கு நாமே திட்டம் நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தின்கீழ் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் 4 நகராட்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு

வடிகால், சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT