ஈரோடு

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

4th Jun 2023 12:11 AM

ADVERTISEMENT

 

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்தியூரில் ஒன்றிய மற்றும் பேரூா் திமுக சாா்பில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அந்தியூா் பேரூராட்சி, காந்தி மைதானத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முன்பாக, அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினா் மௌன அஞ்சலி செலுத்தினா்.

அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, வா்த்தகா் அணி அமைப்பாளா் மகாலிங்கம், பேரூராட்சி துணைத் தலைவா் பழனிசாமி, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT