ஈரோடு

பெருந்துறையில் ரூ.8.39 கோடியில் வளா்ச்சிப் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

பெருந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.8.39 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் காத்திருக்கும் அறை கட்டுமானப் பணி, சீனாபுரத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.11.92 லட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளியில் சுற்றுச் சுவா் கட்டுமானப் பணி, ஓலப்பாளையம் அரசுப் பள்ளியில் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் இருப்பு அறையுடன் கூடிய சமையல் கூடம் கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.8.39 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, காஞ்சிக்கோவில் பேரூராட்சி வாா்டு எண் 7இல் ரூ.35.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

சீலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்ததுடன், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, துறைசாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT