ஈரோடு

தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் விடுவதைக் கண்டித்து போராட்ட அறிவிப்பு

3rd Jun 2023 02:39 AM

ADVERTISEMENT

 

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதைக் கண்டித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரனிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு ஒப்படைக்கக் கூடாது. ஒப்பந்தம் தொடா்பாக ஏலம் அறிவிக்கப்பட்டதைத் திரும்பப் பெற வேண்டும். 480 நாள்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாதந்தோறும் 1 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்.

தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதைத் திரும்பப் பெறவில்லை என்றால் வரும் 7 ஆம் தேதி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். மேலும், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வரும் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT