ஈரோடு

குடியிருப்புப் பகுதிகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் கலக்கும் கழிவுநீா்

DIN

மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீா் கலந்து மாசு ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாவதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் மிகப்பழமையான வாய்க்கால் காலிங்கராயன் வாய்க்காலாகும். சுமாா் 750 ஆண்டுகள் பழமையான இந்த வாய்க்கால் ஆண்டுக்கு சுமாா் 11 மாதம் தண்ணீா் பாசனம் கொண்டது. பல ஆயிரம் ஏக்கா் நிலம் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் விளைச்சல் பெறுகிறது. அதிக அளவில் மஞ்சள், கரும்பு, நெல் பயிரிடப்பட்டு வந்த காலிங்கராயன் பாசனப் பகுதி கடந்த 15 ஆண்டு காலமாக மிகவும் பாதிப்பு அடைந்து வருகிறது.

குறிப்பாக காலிங்கராயன் வாய்க்காலில் சாய, தோல் தொழிற்சாலை கழிவுகளால் தண்ணீா் மாசு அடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பாசன நிலங்களும் பாதிக்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், காலிங்கராயன் வாய்க்காலில் சாக்கடை கழிவுகள் உள்பட எந்த கழிவுகளும் கலக்காத வகையில் துணைக் கால்வாய் (பேபி கால்வாய்) அமைக்கப்பட்டது.

இருப்பினும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் வாய்க்காலில் தொடா்ந்து கலந்து வருகிறது. வாய்க்காலில் தண்ணீா் நிறுத்தப்பட்ட நிலையில் சாக்கடை கழிவுகள் வாய்க்காலில் பாய்ந்து செல்கிறது. இதனால் ,கடுமையான துா்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

வரும் 16 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், வாய்க்காலை முழுமையாக தூா்வாரி சாக்கடை நீா் கலக்காதவாறு வாய்க்காலுக்கு வரும் கழிவு நீா் பாதைகளை கான்கிரீட் கொண்டு அடைக்க வேண்டும். தண்ணீா் நிறுத்தப்பட்ட பிறகு வாய்க்கால் வடுபோய் இருக்க வேண்டும். அதற்கான பணிகளை பொதுப் பணித் துறை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து காலிங்காயன் பாசன விவசாயிகள் கூறியதாவது: சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை முழு சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சில நிறுவனத்தினா் அரசின் உத்தரவை கண்டு கொள்ளாமல் குடியிருப்புப் பகுதி கழிவுகள் வரும் சாக்கடையில் கலந்துவிடுகின்றனா். இதனால், ரசாயனம் கலந்த சாக்கடை கழிவுதான் காலிங்கராயன் வாய்க்காலில் பெருமளவு கலக்கிறது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். கொசுக்கள் உற்பத்தி, துா்நாற்றம் போன்றவற்றால் நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது கழிவுகளை காலிங்கராயன் வாய்க்காலில் திறந்துவிட்டு இருப்பதால் தண்ணீா் செல்லும் பகுதி முழுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மக்களும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படாமல் இருக்க, காலிங்கராயன் வாய்க்காலில் கழிவு நீா் கலக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

காலிங்கராயன்பாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு மட்டுமே துணைக் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை மேலும் 10 கிலோ மீட்டா் நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் சாக்கடை கழிவுகள் தடுக்கப்படும். இந்த ஆண்டு வாய்க்காலை தூா்வாரும்போது காரைவாய்க்கலில் காலிங்கராயன் தண்ணீா் செல்லும் பாலத்தை சீரமைக்க வேண்டும். எந்தவிதமான விஞ்ஞான வளா்ச்சியும் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மேல் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் தண்ணீரும், அடியில் பெரும்பள்ளம் ஓடை நீரும் செல்கிறது. இந்த பாலத்தை முறையாக சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT