ஈரோடு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் 28 ஜோடிகளுக்கு திருமணம்

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் 28 ஜோடிகளுக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், வைகாசி மாதத்தின் வளா்பிறை முகூா்த்த நாளான வியாழக்கிழமை மண்டபங்கள், கோயில்களில் திருமணங்கள் மற்றும் புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப காரியங்கள் பரவலாக நடைபெற்றன. இதனால், கோயில்கள், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சங்கமேஸ்வரா் சன்னிதி, வேதநாயகி அம்மன் சன்னிதி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் சன்னிதிகளில் மொத்தம் 28 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இதனால், கோயில் வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT