ஈரோடு

கோவை-கன்னியாகுமரி ரயிலை ஈரோடு வழியாக இயக்கக் கோரிக்கை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கோவை-கன்னியாகுமரி ரயிலை ஈரோடு வழியாக இயக்க வேண்டும் என்று வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், பொருளாளா் முருகானந்தம் ஆகியோா் ஈரோடு எம்பி அ.கணேசமூா்த்தியிடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: தாதா்-திருநெல்வேலி(11021), திருநெல்வேலி-தாதா் (11022) ரயிலை ஈரோடு சந்திப்பு வழியாக இயக்க வேண்டும். அதேபோல, கோவை- கன்னியாகுமரி புதிய ரயிலையும் ஈரோடு வழியாக இயக்க வேண்டும்.

நேரம் மாற்றியமைக்கப்பட்ட நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழைய நேரத்தின்படி ஈரோடு ரயில் நிலையத்துக்கு இரவு 10.30 மணியளவில் வந்தடையுமாறு இயக்க ஆவன செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT