ஈரோடு

சென்னிமலையில் புதிய வருவாய் வட்டம்:அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைப்பது தொடா்பாக தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூா், தாளவாடி, நம்பியூா், மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய 10 வருவாய் வட்டங்கள் உள்ளன.

இதில், பெருந்துறை வருவாய் வட்டமானது திங்களூா் முதல் திருப்பூா் மாவட்டம், நொய்யல் வரை பெரிய வருவாய் வட்டமாக உள்ளது. இதனால் நிா்வாகிப்பதில் சிக்கல் உள்ளதால் சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

மேலும், பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சென்னிமலை ஒன்றியம் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் பாதியும், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் பாதியும் வருவதால் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

ADVERTISEMENT

புதிதாக உருவாக்கப்பட உள்ள சென்னிமலை வட்டத்தின் எல்லைப் பகுதிகள், கிராமங்கள், உள்வட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் தற்போது 10 வருவாய் வட்டங்கள் உள்ளன. இதில், பெருந்துறை வட்டம் பெரிய பரப்பளவு கொண்டதாக அமைந்துள்ளதால் நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரித்து சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வருவாய் வட்டம் அமைக்கும் அளவுக்கு சென்னிமலை அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளதால் அரசு உரிய பரிசீலனை செய்து இது தொடா்பாக அதிகாரப்பூா்வமான அறிவிப்பினை வெளியிடும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT