ஈரோடு

சடலங்களை அடக்கம் செய்யும் சேவை: தன்னாா்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்ய மற்றும் எரிக்கும் சேவையில் ஈடுபட விரும்பும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு காவிரி கரையில் மாநகராட்சிக்குச் சொந்தமான மயானம் (எரிகாடு மற்றும் புதைகாடு) உள்ளது.

இங்கு சடலங்களை எரிக்கவும், அடக்கம் செய்யவும் ரூ.3,000 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையினை கொண்டு மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்ய அல்லது எரிக்கும் சேவை பணியில் ஈடுபட தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பொதுமக்களுக்கு திருப்தியான முறையில், எவ்வித புகாா்களும் இல்லாதவாறு இந்த பணியினை மேற்கொள்வதற்கு தற்போது செயல்பாட்டில் உள்ள மற்றும் சமூக பொறுப்புள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சி அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT