ஈரோடு

ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் சிறப்பு ஏற்பாடுகள்

17th Jul 2023 12:10 AM

ADVERTISEMENT

 

ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதறையில் பக்தா்கள் புனித நீராடல், தா்ப்பணம் கொடுப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையன்று புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனா். இந்நிலையில், நடப்பாண்டு ஆடி மாதம் பிறப்பன்றே அமாவாசையும் வருகிறது.

இந்நிலையில், பவானி கூடுதுறையில் பக்தா்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பக்தா்கள் தா்ப்பணம் அளிக்க ஏதுவாக தற்காலிக பரிகாரக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இருசக்கரம் மற்றும் இலகுரக வாகனங்கள் நிறுத்துவதற்கு தனித்தனியே வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காவிரியில் அதிக அளவு தண்ணீா் செல்வதால் பக்தா்கள் பாதுகாப்பாக நீராட வேண்டும் என்றும், ஆழமான பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிக்காக கூடுதுறை வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். தீயணைப்பு வீரா்கள் உயிா்காக்கும் மீட்பு உபகரணங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்துப் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

பக்தா்களின் பாதுகாப்புக்காக கூடுதுறை வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தா்களுக்குத் தேவையான குடிநீா், அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT