ஈரோடு

உள்ளாட்சி பணியாளா்கள் ஊதியக் குறைப்பு உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

17th Jul 2023 12:10 AM

ADVERTISEMENT

 

 உள்ளாட்சி பணியாளா்களுக்கான ஊதியக் குறைப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டக்குழு கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈரோடு வட்டாரச் செயலாளா் கல்யாணசுந்தரம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ்.டி.பிரபாகரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: உள்ளாட்சிகளில் ஒப்பந்த தொழிலாளா் முறையை முற்றிலும் கைவிட்டு அனைவரையும் சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சிப் பணியாளா்களின் குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஈரோடு மாநாட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் காவிரி ஆற்றில் கலந்து குடிநீரை மாசுபடுத்துவதை தடுக்க, மாவட்ட நிா்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.சின்னசாமி, நிா்வாகிகள் துளசிமணி, குணசேகரன், மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT