ஈரோடு

பெருந்துறையில் இன்று மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

DIN

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

இம்முகாமில் கலந்து கொள்பவா்கள், மாற்றுத் திறன் கொண்டவா்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், 8 பாஸ்போா்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்றிதழ், பெற்றோரின் ஆதாா் அட்டை நகல், பெற்றோரின் வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கம் நகல், யூடிஐடி நகல் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும்.

முகாமில், மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு இயன்முறை சிகிச்சை வழங்குதல், தேசிய அடையாள அட்டை, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணம், பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், வீட்டுப் பயிற்சியில் ஊக்கத் தொகை வழங்குதல், போக்குவரத்து மற்றும் பாதுகாவலா் வசதிக்கான உதவித் தொகை வழங்குதல், மாற்றுத் திறன் மாணவா்களுக்கான ஆரம்பகால பயிற்சி மையம் ( 0 முதல் 6 வயது வரை) மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையம் (6 முதல் 18 வயது வரை), கல்வி மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT