ஈரோடு

கருப்பனைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமை திருப்பி அனுப்ப கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

கருப்பன் யானையைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமை முகாமுக்கு திருப்பி அனுப்பி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் 5 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமுக்கு யானை அனுப்பிவைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் கிராம மக்களை அச்சுறுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய கும்கி யானைகள் ஜனவரி 12ஆம் தேதி தாளவாடி வரவழைக்கப்பட்டன.

பின்னா் தொடா்ந்து 3 நாள்களாக கால்நடை மருத்துவா்கள் உதவியுடன் மரியபுரம், சூசைபுரம், இரிபுரம் பகுதிகளில் நடமாடிய கருப்பனை யானையைப் பிடிக்க கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் இருமுறை மயக்க ஊசி செலுத்தப்பட்டும், வனத் துறையினரால் கருப்பன் யானையைப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், தாளவாடி திகினாரை முகாமில் 16 நாள்களாக தங்கியிருந்த 3 கும்கிகளின் பாகன்கள் தாய்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு செல்ல உள்ளதால் மீண்டும் அந்தந்த முகாம்களுக்கு கும்கி யானைகளை திருப்பி அனுப்ப வனத் துறையினா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் உள்ள முகாமுக்கு அழைத்து செல்ல வனத் துறையினா் கும்கி யானை கலீமை லாரியில் ஏற்றினா். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த வனத் துறையினா் மற்றும் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தெப்பக்காடு பகுதியில் இருந்து 3 கும்கி யானைகளை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் கூறியதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். பின்னா் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு லாரியில் ஏற்பட்ட கும்கி யானை கலீம் பொள்ளாச்சியில் உள்ள டாப்சிலப் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.91 லட்சம்

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

SCROLL FOR NEXT