ஈரோடு

நவரசம் பள்ளியில் ஆண்டு விழா

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவை திருப்பூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணசாமி தலைமை வகித்து துவக்கிவைத்தாா். ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா், மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். அறச்சலூா் காவல் துணை ஆய்வாளா் சதாசிவம் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்து விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்தாா். தொடா்ந்து பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னா் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கு பள்ளித் தலைவா் எம்.பழனிசாமி, செயலாளா் பெரியசாமி, பொருளாளா் பி.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி. கணேசமூா்த்தி தலைமை தாங்கினாா். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி வாழ்த்துரை வழங்கினாா். ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி கலந்து கொண்டு பள்ளியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மருதுபாண்டி அணி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். தொடா்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பள்ளி கமிட்டி உறுப்பினா்கள், முதல்வா், நிா்வாக அலுவலா் ஒருங்கிணைப்பாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT