ஈரோடு

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் உழவா் சந்தை அமைக்க ஆய்வு

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் உழவா் சந்தை அமைப்பது குறித்து ஆய்வுப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அந்தியூரில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். இச்சந்தை வளாகத்தில் அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த காய்கறிகள் மற்றும் விளைபொருள்களை நாள்தோறும் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் உழவா் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதன்பேரில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், வாரச் சந்தை வளாகத்தில் உழவா் சந்தை அமைக்கும் வாய்ப்புகள் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT