ஈரோடு

‘மாணவா்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த களம் வேண்டும்’

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மாணவா்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த களம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஆற்றல் அறக்கட்டளை தலைவா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

ஈரோடு கலைக் கல்லூரியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான டேலண்ட் பெஸ்ட் 2023 என்ற தலைப்பில் திறன் அறியும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் மனநல மருத்துவா் கிருத்திகா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆற்றல் அறக்கட்டளை தலைவா் அசோக்குமாா் பேசியதாவது:

மாணவா்கள் ஒவ்வொருவரிடமும் தனித் திறமை உள்ளது. அதனை வெளிப்படுத்த களம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியறிவு முக்கியம். அத்துடன் விளையாட்டு, கலை, சமூக நல ஈடுபாடு, நடனம், நாட்டியம் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்பக் கல்வியில் இருந்து தனித் தன்மையை மேம்படுத்தினால் சாதனையாளராக முடியும் என்றாா்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக நக்கீரன் கோபால், மருத்துவமனை இயக்குநா் தங்கம் கிருஷ்ணசாமி, குழந்தைகள் மனநல மருத்துவா்பாபு ரங்கராஜ் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் 300க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT