ஈரோடு

ஆப்பக்கூடலில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆப்பக்கூடல் பேரூராட்சி 14ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலா் கே.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி, மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.ஜெகநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இப்பகுதி மககளுக்குத் தேவையான குடிநீா், தெருவிளக்கு, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது. கிளைச் செயலாளா் எம்.காளீஸ்வரன், நிா்வாகிகள் ஏ.ஆா்.துரைசாமி, ஏ.பி.திருநீலகண்டன், பி.தளிா்க்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல, புன்னம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக பவானி வட்டார செயலாளா் எஸ்.மாணிக்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேலாமரத்தூரில் கட்டப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT