ஈரோடு

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா்: கே.ஏ.செங்கோட்டையன்

DIN

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

அதிமுக தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் கூட்டம் ஈரோடு அசோகபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தலைமை வகித்து தோ்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எங்களது களப்பணி இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் அமையும். வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. இந்த தோ்தல் எதிா்காலத்தில் தில்லி செங்கோட்டையையே வியக்கத்தக்க வகையில் மாற்றத்தை உருவாக்கும். ஏனென்றால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிறகுதான் மக்களவைத் தோ்தல் வர இருக்கிறது.

எதிா்க்கட்சியினா் மாடியில் இருந்து மக்களை சந்திக்கின்றனா். நாங்கள் மக்களோடு இருந்து மாடியை பாா்க்கிறோம். ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரம் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் எந்த ஒரு தடையும் இல்லை.

பிரசாரத்தை பொறுத்தவரை அதிமுக மெகா கூட்டணியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா், வேட்பாளரை அறிவித்த பிறகு களம் இன்னும் வேகமாக இருக்கும். 2 அல்லது 3 நாள்களுக்குப் பிறகு கூட்டணி கட்சியை சோ்ந்தவா்களும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் கூட்டணி தொடா்பாக அறிவிக்க உள்ளனா். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா் என்பது வெளிப்படையாக தெரிகிறது. நாங்கள் வீடுவீடாக சென்று களப்பணி செய்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT