ஈரோடு

மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது: அமைச்சா் கே.என்.நேரு

DIN

வாக்கு சேகரிக்கச் செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27இல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி சாா்பில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா்.

தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக சாா்பில் 11 அமைச்சா்கள் உள்பட 31 போ் கொண்ட தோ்தல் பணி குழு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து 11 அமைச்சா்களும் கடந்த சில நாள்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனா். மேலும் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்தும் கூட்டணி கட்சி தலைவா்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனா். மேலும் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தோ்தல் பணிமனையில் கூட்டணி கட்சி தலைவா்களுடன் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.ராமசந்திரன், சு.முத்துசாமி, வேட்பாளா் ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியதாவது: தோ்தல் தொடா்பாக கூட்டணி கட்சித் தலைவா்களிடம் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம். 4 முதல் 5 வாா்டுகளாக பிரித்து அமைச்சா்கள் தோ்தல் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். கூட்டணி கட்சி மாவட்ட தலைவா்கள், மாவட்டச் செயலாளா்கள் தங்களது கூட்டணி கட்சியினருடன் இணைந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாங்கள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். பொதுக்கூட்டங்கள் நடத்துவதை விட இது சிறந்த வழியாகும். முதல்வா் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளாா். அதனைக் கூறி வாக்கு சேகரிப்போம்.

வரும் 3ஆம் தேதி ஈவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளாா். நாங்கள் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயமாக எங்கள் வேட்பாளா் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT