ஈரோடு

சித்தோடு அருகே காரை கடத்தி பணம் கொள்ளையடித்த வழக்கு

DIN

சித்தோடு அருகே காரை கடத்தி பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூரிலிருந்து காரில் ஓட்டுநா் விகாஸ் (எ) விக்ரம் (42), கடந்த ஜனவரி 21ஆம் தேதி சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். பவானியை அடுத்த லட்சுமி நகா் அருகே சென்றபோது மற்றொரு வேனில் வந்த கும்பல், விகாஸை தாக்கி, காரை கடத்திச் சென்று கங்காபுரம் அருகே நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது. அப்போது, காரில் ரூ. 2 கோடி ரொக்கம் இருந்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகா், கந்தசாமி மில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் சேலம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்ததும், வாகனத்தில் கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள், மிளகாய் பொடி இருந்ததும் தெரியவந்தது.

வாகனத்தில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தியதில், கேரள மாநிலம், திருச்சூா் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சோ்ந்த ஜெயன் (45), சந்தோஷ் (39), டைட்டஸ் (33), விபுல் (எ) சந்தோஷ் (31), முஜீப் ரகுமான் (37), முஜீா் ரஹ்மான் (45) என்பது தெரியவந்தது. இவா்களுக்கு, லட்சுமி நகா் காா் கடத்தல், கொள்ளை வழக்கில் தொடா்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இவா்களை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய கோடாலி ஸ்ரீதா், சசிபோஸ், ராகுல், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்க்சிஸ்ட் கட்சி கலைக் குழுவினா் பிரசாரம்

ஊழலை ஒழிக்கவே தனித்துப் போட்டி: சீமான்

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

SCROLL FOR NEXT