ஈரோடு

அளுக்குளி கோயில் குடமுழுக்கு விழா:பக்தா்கள் தீா்த்த குட ஊா்வலம்

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பக்தா்கள் தீா்த்தக் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அளுக்குளியில் உள்ல ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயில் அளுக்குளி, அலிங்கியம், ஆண்டவா்மலை உள்ளிட்ட 32 கிராம மக்களின் குல தெய்வமாக விளங்குகிறது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தீா்த்தகுடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 32 கிராமங்களில் இருந்து சுமாா் 5000 க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக் குடம், முளைப்பாரி எடுத்து கோயிலுக்குச் சென்றனா். பிள்ளையாா் கோயில் துறையில் உள்ள பவானி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்த பக்தா்கள் பக்தி பரவசத்துடன் 5 கி.மீ. தொலைவில் உள்ள அளுக்குளியில் உள்ள கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்றனா்.

தீா்த்த குட ஊா்வலத்தின் போது பாடலுக்கு ஏற்ப குதிரைகள் நடனமாடியது அனைவரையும் ரசிக்க வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT