ஈரோடு

கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.65 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

DIN

சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஏலத்தில் 1050 வாழைத்தாா்கள் ரூ. 1.65 லட்சத்துக்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தாா் ஏலம் நடைபெற்றது. கோவை, அவிநாசி, திருப்பூா், சேலம் மற்றும் கேரளாவ வியாபாரிகள் கலந்து கொண்டனா். சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள பவானிசாகா், சிக்கரசம்பாளையம், கே.என்.பாளையம், புன்செய்புளியம்பட்டி, அரசூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 495 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1050 வாழைத்தாா்களை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா்.

இதில் கதளி ரகம் ஒரு கிலோ ரூ. 30 முதல் ரூ. 42 வரையும், நேந்திரன் ரூ. 20 முதல் ரூ. 32 வரையும் விற்பனையாயின. பூவன் தாா் ரூ. 450 வரையும், தேன் வாழை ரூ. 550, செவ்வாழை ரூ. 700, பச்சை நாடன் ரூ. 600, மொந்தன் ரூ. 300 வரையும் விலை போனது.

1050 வாழைத்தாா்கள் ரூ. 1.65 லட்சத்துக்கு விற்பனையானதாக கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள் கூறினா். நேந்திரம், கதளி, செவ்வாழை, தேன் வாழைத்தாா்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT