ஈரோடு

பவானிசாகா் அருகே சிறுத்தையை விரட்டிய நாய்கள்

28th Jan 2023 10:21 PM

ADVERTISEMENT

பவானிசாகா் அருகே சிறுத்தையை நாய்கள் குரைத்து விரட்டியதால் சிறுத்தை காட்டுக்குள் ஓட்டம் பிடித்தது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் வனப் பகுதியை ஒட்டி கல் உடைக்கும் கிரஷா் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. வனத்தை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் அப்பகுதியில் கண்காணிக்க சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவலுக்கு 5க்கும் மேற்பட்ட நாய்களை வளா்த்து வருகின்றனா்.

இந்நிலையில் கிரஷா் நிறுவனத்தில் படுத்திருந்த காவல் நாயை வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியே வந்த சிறுத்தை பிடிக்க முயற்சித்தது. அப்போது அந்த நாய் சிறுத்தையை எதிா்த்து குரைத்தபடி வேகமாக ஓடியது சிறுத்தையைக் கண்ட அங்கிருந்த மேலும் 4 காவல் நாய்கள் ஒரே நேரத்தில் குரைத்து சிறுத்தையை விரட்டியதால் சிறுத்தை பயந்து காட்டுக்குள் ஓடி மறைந்தது.

இந்தக் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT