ஈரோடு

ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்க வணிகா்கள் கோரிக்கை

DIN

விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவா்களுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 4ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். செயலாளா் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதி நிலை அறிக்கை சமா்ப்பித்தாா். இதில் மாநகராட்சி துணை மேயா் வி.செல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் 40 பொருள்களுக்கான சா்வீஸ் சாா்ஜ் எனப்படும் செஸ் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வணிகா்களின் கோரிக்கையை ஏற்று வணிக வரித்துறை நடத்திக் கொண்டிருந்த சோதனை கொள்முதல் மற்றும் திடீா் சோதனை ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிப்பது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வசூலிக்கும் செஸ் வரியை முற்றிலும் நீக்கிட அரசு ஆவண செய்யவேண்டும். விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு, ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபா், நிறுவனங்களுக்கு வருமான வரியில் இருந்து மத்திய அரசு முழு விலக்கு அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டியின் கீழ் மிக கடுமையான பிணையத் தொகை வசூலிக்கப்படுவதால் எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே ரூ.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்துவரும் சிறு, குறு நிறுவனங்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ. 50 ஆயிரம் பிணையத் தொகையை ரூ.5 ஆயிரம் என வரையறுக்க வேண்டும்.

சிறு, குறுந்தொழில் வளா்ச்சிக்காக சித்தோடு அருகே ஐஆா்டிடி பொறியியல் கல்லூரி அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வா்த்தக மையம் அமைக்க ஒதுக்கீடு செய்து தரவேண்டும். மிகவும் பழுந்தடைந்து மோசமான நிலையில் உள்ள ஈரோடு நகரச் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பின் இணைச் செயலாளா் ஜிப்ரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT