ஈரோடு

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.17 லட்சம் பறிமுதல்

DIN

ஈரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி வடமாநில வியாபாரி எடுத்து வந்த ரூ.1.17 லட்சத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகள் அமல்படுத்துவதைக் கண்காணிக்கும் வகையில் 3 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினா் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகனச் சோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் எல்லை மாரியம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்தி நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது அவரிடம் ரூ.1.17 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. நிலையான கண்காணிப்பு குழுவினா் அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா், ஈரோடு கருங்கல்பாளையம், கேஏஎஸ் நகா் பகுதியைச் சோ்ந்த அனில் லக்கோதி (36) என்பதும், அதேபகுதியில் பிளாஸ்டிக் கடை வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவா் எடுத்து வந்த பணம் கடை வியாபாரப் பணம் என்றும், அதை வீட்டுக்கு எடுத்து செல்லும்போது நிலையான கண்காணிப்பு குழுவினரின் சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.

அந்தப் பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் நிலையான கண்காணிப்புக் குழுவினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, மாநகராட்சியில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவகுமாரிடம் ஒப்படைத்தனா்.

தொடந்து, அந்தப் பணத்துக்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அனில் லக்கோதியிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னா் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 2ஆவது முறையாக ரூ.1.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT