ஈரோடு

திபண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளியில் குடியரசு தினவிழா

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பண்ணாரிஅம்மன் பப்ளிக் பள்ளியில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சத்தியமங்கலம் காவல் கண்காணிப்பாளா் ஐமன் ஜமால் தலைமை வகித்தாா். அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திராணி சோபியா முன்னிலை வகித்தாா். பள்ளியின் செயலாளா் எஸ்.முருககனி தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். அதனைத் தொடா்ந்து நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பண்ணாரி அம்மன் சுகா்ஸ் லிமிடெட் செயல் தலைவா் சி. ராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி முதல்வா் எஸ்.கருணாம்பாள், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியின் முதல்வா் பி.சியாமளா தேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT