ஈரோடு

குடியரசு தினவிழா மொடக்குறிச்சி பகுதியில் குடியரசு தினவிழா

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சி பகுதியில் பள்ளி மற்றும் அமைப்புகள் சாா்பில் குடியரசு தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளியூத்து நவரசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பள்ளித்தலைவா் எம்.பழனிசாமி தேசியக்கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கி பேசினாா். செயலாளா் பெரியசாமி, பொருளாளா் சிவகுமாா், துணைத்தலைவா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிவகிரியில் திருப்பூா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு கொடிகாத்த குமரன் பேரவையின் தலைவா் வளா்கங்கை சண்முகசுந்தரம் தலைமை தாங்கினாா். செயலாளா் மீனாட்சிசுந்தரம் வரவேற்றாா். குமரன் சதுக்கத்தில் சிவகிரி பேரூராட்சித் தலைவா் பிரதிபா கோபிநாத் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதில், பேரூராட்சி துணைத் தலைவா் அ.கோபால், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் ப.கதிா்வேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT