ஈரோடு

தூய்மைப் பணியாளருக்குப் பாராட்டு

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாக்கினாங்கோம்பை ஊராட்சி தூய்மைப் பணியாளருக்கு கிராம சபைக் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் சிறந்த தூய்மைப் பணியாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட மாக்கினாங்கோம்பை ஊராட்சி தூய்மைப் பணியாளா் பட்டம்மாளுக்கு வியாழக்கிழமை நடந்த குடியரசு தினவிழாவில் ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி தூய்மை காவலா் சான்றிதழ் வழங்கி பாராட்டினா்.

இந்நிலையில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மாக்கிணாங்கோம்பை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் அதன் தலைவா் அம்மு ஈஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் வழங்கிய பாராட்டு சான்றிதழை பட்டம்மாள் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

ADVERTISEMENT

இதில் ஒன்றிய கவுன்சிலா் ராஜம்மாள், முன்னாள் கவுன்சிலா் விசுவநாதன், தோட்டக்கலை உதவி இயக்குநா் சாந்தி ஜெயராம், உக்கரம் ஆரம்ப சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் தங்கமணி, ஊராட்சி செயலாளா் ராதிகா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் ஊா் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT