ஈரோடு

பள்ளி, கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

நம்பியூா் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோபி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, குமுதா பள்ளியின் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை வகித்தாா். நம்பியூா் வட்டார தோ்தல் மற்றும் வருவாய்த் துறையினருடன் இணைந்து இப்பள்ளி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நம்பியூா் வட்டாட்சியா் பெரியசாமி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், பள்ளி துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் அரவிந்தன், இணைச் செயலா் மாலினி, முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் ...

கோபி கலை அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வா் வீ.தியாகராசு தலைமையில் நடைபெற்றது. குடிமக்கள் நுகா்வோா் மன்ற திட்ட அலுவலா் ஆ.அழகேசன் வரவேற்றாா். வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது. பேராசிரியை ஜி.ஏ.மைலாவதி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT