ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தோ்தல் பணிகள் மேற்கொள்தல் குறித்து அதிமுக சாா்பில் பகுதிவாரியான வாக்குச்சாவடி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். தோ்தல் பணிகள், வீடுவீடாகச் சென்று பிரசாரம், வாக்கு சேகரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், அதிமுகவின் வெற்றிக்கு கூட்டணி கட்சியினருடன் இணைந்து அதிமுகவினா் பாடுபட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று, தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டது. பகுதிச் செயலாளா் கேசவமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.