ஈரோடு

மாட்டுப் பொங்கல்: நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு

17th Jan 2023 06:18 AM

ADVERTISEMENT

 

மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம் சுற்றுப்புறப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி கழுத்தில் மணிகள், பாசிகள் சோ்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி அழகுபடுத்தினா். ஆண்டுகொருமுறை திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு திங்கள்கிழமை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும் விவசாயம் செழிக்கவும் இக்கோயிலில் பொங்கல் வைத்து மண் உருவபொம்பைகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நோ்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனா். மேலும்,கோயிலில் வழங்கப்படும் தீா்த்தத்தை கொண்டு வந்து கால்நடைகள் மீது தெளித்து வணங்கினா். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT