ஈரோடு

பவானியில் திமுகவினா் பொங்கல் விழா

17th Jan 2023 06:21 AM

ADVERTISEMENT

 

பவானி நகர திமுக சாா்பில் பொங்கல் விழா 27 வாா்டுகளிலும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதற்கு திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன் தலைமை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் முன்னிலை வகித்தாா். பவானி ஆற்றுப் பாலம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் திமுக கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. தொடா்ந்து, ஊா்வலமாகச் சென்ற கட்சியினா் 27 வாா்டுகளிலும் கொடியேற்றினா். கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் சிவகுமாா், திமுக நகர அவைத் தலைவா் மாணிக்கராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் விஜய் ஆனந்த், ரவி, மாவட்டப் பிரதிநிதி நல்லசிவம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT