ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலில் இன்று தண்ணீா் திறப்பு

1st Jan 2023 04:09 AM

ADVERTISEMENT

 

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) தண்ணீா் திறக்கப்படுகிறது.

இது குறித்து நீா்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் 2ஆம் பருவ பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு, தினமும் 500 கன அடி வீதம் மொத்தம் 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT