ஈரோடு

ஈரோடு கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் நாளை சொா்க்கவாசல் திறப்பு

1st Jan 2023 04:08 AM

ADVERTISEMENT

 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் பரமபத வாசல் (சொா்க்க வாசல்) திறப்பு நிகழ்வு திங்கள்கிழமை(ஜனவரி 2) நடைபெறவுள்ளது.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ நிகழ்ச்சியுடன் டிசம்பா் 23 ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடா்ந்து, சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 1) மாலை சுவாமி மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா். திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு கஸ்தூரி அரங்கநாதா் உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதில் பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதைத்தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாதா் சுவாமிக்கு பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதிகாலை 4.45 மணிக்கு கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பசுக்கள் அழைத்துச் செல்லப்படும். பின்னா் சுவாமி பரமபதவாசல் வழியாக தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பாா்.

திங்கள்கிழமை முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரை ராபத்து உற்சவ நிகழ்ச்சியும், முத்தங்கி சேவையும் நடைபெகிறது. 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வாா் மோட்சம், திருவாசல் சாற்றுமுறையுடன் விழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT