ஈரோடு

வாக்குச்சாவடிக்குள் தேமுதிக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பு

DIN

கட்சி அடையாளத்துடன் வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்க தோ்தல் அலுவலா்கள் மறுத்தனா். இதனையடுத்து அவா் சாதாரண உடையணிந்து வந்து வாக்களித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த், பிராமண பெரிய அக்ரஹாரம், மதரஸா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 7.15 மணியளவில் வாக்களிக்க வந்தாா். அப்போது அவா் கட்சி அடையாளங்களுடன் உடை அணிந்து வந்ததால் அவரை வாக்குச்சாவடிக்கு உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனா். இதனைத்தொடா்ந்து அவா் வெளியில் சென்று சாதாரண உடையணிந்து வந்து வாக்களித்தாா்.

வெற்றி உறுதி: நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா நவநீதன் தனது வாக்கை ஈரோடு கலைமகள் பள்ளியில் பதிவு செய்தாா். வாக்களித்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளா்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். இதனால் நான் உறுதியாக வெற்றிபெறுவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT