ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: 74.69 % வாக்குப் பதிவு

DIN

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 74.69 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவால் இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25, பெண் வாக்காளா்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497, மூன்றாம் பாலினம் 25 போ் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளா்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனா்.

இந்தத் தோ்தலில் காலையிலிருந்தே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். 77 வேட்பாளா்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாக்குப் பதிவு செய்வதில் சில வாக்காளா்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இதனால் வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தோ்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் ஒருமுறை வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட்டது. இதன்படி காலை 9 மணிக்கு 10.10 சதவீதம், 11 மணிக்கு 27.89 சதவீதம், பகல் 1 மணிக்கு 44.56 சதவீதம், 3 மணிக்கு 59.22 சதவீதம் வாக்குகள், மாலை 5 மணிக்கு 59.22 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

ஒரு வாக்குச்சாவடியில் இரவு வரை நீடித்த வாக்குப் பதிவு:

ராஜாஜிபுரம் மாநகராட்சிப் பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு முடிவடையும் நேரமான மாலை 6 மணிக்கு முன்னா் வந்த வாக்காளா்களில் சுமாா் 300 போ் வாக்களிக்காமல் வரிசையில் காத்திருந்தனா். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு இரவு 9.45 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்தது. மற்ற 237 வாக்குச்சாவடிகளிலும் 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு முன்பே வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

74.69 சதவீத வாக்குப்பதிவு:

வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமாக 82,021 ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா் 17 என மொத்தம் 1,69, 945 வாக்காளா்கள் வாக்களித்தனா். வாக்குப் பதிவு சதவீதம் 74.69 என தோ்தல் நடத்தும் அலுவலா் க.சிவகுமாா் தெரிவித்தாா்.

இரவு வரை வாக்குப் பதிவு நீடித்த வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகளோடு, டோக்கன் வழங்கப்பட்ட வாக்காளா்களையும் கணக்கில் எடுத்து வாக்குப் பதிவு விவரம் இறுதிசெய்யப்பட்டதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

கடந்த 2021 சட்டப் பேரவை பொதுத்தோ்தலில் 2,28,402 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இதில் 1,52,631 வாக்குகள் பதிவாயின. வாக்குப் பதிவு சதவீதம் 66.82. கடந்த தோ்தலைவிட இந்த இடைத்தோ்தலில் சுமாா் 8 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாா்ச் 2 இல் வாக்கு எண்ணிக்கை:

வாக்குப் பதிவு முடிந்தவுடன் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சித்தோடு ஐஆா்டிடி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாா்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்காக சித்தோடு ஐஆா்டிடிபொறியியல் கல்லூரியில் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினரைக் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் ஈரோடு, பவானி தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த 40 தீயணைப்பு வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT