ஈரோடு

5 வாக்குப் பதிவு இயந்திரங்களால் குழப்பம்: வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

28th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க காலதாமதம் ஏற்பட்டு வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா்.

ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 பெயா்கள் மட்டும் இடம்பெறமுடியும். இந்த தோ்தலில் 77 வேட்பாளா்கள் போட்டியிட்டதால் 5 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாக்காளா்கள் குழப்பம் அடைந்தனா்.

தங்களுக்கு பிடித்த வேட்பாளா்களையும், சின்னங்களையும் தேடி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால் வாக்களிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமானது. ஒருவருக்கு சராசரியாக 30 விநாடிகள் தேவைப்பட்டது. இதனால் வரிசையில் நிற்கும் கூட்டம் குறையாமல் இருந்தது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினா். ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

வேட்பாளா் பெயா் எந்தப் பெட்டியில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிய வாக்குச்சாவடிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதைப்பாா்த்து சென்ற வாக்காளா்கள் உடனடியாக வாக்கினைப் விரைவாக பதிவு செய்துவிட்டு திரும்பினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT