குடியாத்தம், ஆம்பூா் ரயில் நிலையங்கள் அருகே வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிப்பட்டு இருவா் உயிரிழந்தனா்.
வளத்தூா்-குடியாத்தம் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கதக்க முதியவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் ரயில் நிலையம் அருகே மேல்பட்டி ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் சுமாா் 27 வயது மதிக்கதக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, கேரளா மாநிலம், எா்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து டாடா நகா் ரயில் நிலையம் செல்லும் விரைவு ரயிலில் அடிப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இறந்தவா்கள் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் என்பது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.