ஈரோடு

திமுக, பணம் விநியோகம்: அதிமுக புகார்

DIN

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கும் இடையன்காட்டுவலசு பகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் திங்கள்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுகவில் கே.எஸ்.தென்னரசு,  நாம் தமிழர் கட்சியில் மேனகா நவநீதன், தேமுதிகவில் எஸ்.ஆனந்த்  மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் சில வாக்குச்சாவடி மைங்களில் வைக்கப்படும் மை, எண்ணெய் வைத்தாலே அழிவதாக அதிமுக புகாரளித்தது. ஆனால் தேர்தல் அலுவலர் சார்பாக மை அழியவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள இரு வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ள புகாரில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக விதிமீறலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 138, 139ல் திமுகவினர் கட்சிக் கொடியுடன் பணப்பட்டுவாடா செய்கின்றனர். அதேபோல் வெளி மாவட்ட திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT