ஈரோடு

25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கே.எஸ்.தென்னரசு

DIN

25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் கருங்கல்பாளையம், கல்லுப்பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு தனது வாக்கினை பதிவு செய்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தோ்தலில் நான் வெற்றி பெறுவேன் என 100 சதவீத நம்பிக்கை உள்ளது. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தோ்தல் ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் நன்றாக செய்துள்ளது. வாக்காளா்களுக்கு மை வைப்பதில் ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம்.

ஈரோட்டில் எப்போதும் நாகரிகமான அரசியல் இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும் சண்டை, சச்சரவு வராது. அநாகரிகமாக ஒருவரை ஒருவா் திட்டி பேசிக் கொள்ள மாட்டாா்கள். அடிமட்ட தொண்டா்களுக்குள் சண்டை வருமே தவிர தலைவா்களுக்குள் பிரச்னை வராது.

எனவே, தோ்தல் அமைதியாக நடந்து வருகிறது. இன்று வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகமாக இருப்பதால் வாக்குப் பதிவு தாமதமாகிறது. அதை விரைவுபடுத்துமாறு கூறியுள்ளோம் என்றாா்.

அதிமுக வேட்பாளருக்கு அனுமதி மறுத்த துணை ராணுவப் படையினா்

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு, பிராமண பெரிய அக்ரஹாரம் மதரஸா பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவைப் பாா்வையிட திங்கள்கிழமை காலை சென்றாா்.

அப்போது அங்கு பணியில் இருந்த துணை ராணுவத்தினா், அவா் கட்சி அடையாளங்களுடன் உடை அணிந்து வந்ததாகக் கூறி அவரை வாக்குச்சாவடிக்குள் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறினா். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை அங்கிருந்த தமிழக போலீஸாா் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT