வேளாண் விளைப்பொருள்கள் மதிப்புக் கூட்டுதல், தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு கோபியில் திங்கள்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.
இம்முகாமுக்கு கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி வழிகாட்டுதலின்படி விவசாயிகள் ஆலோசனைக்குழுத் தலைவா் ரவீந்திரன் தலைமை வகித்தாா்.
இப்பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு, சிறுதானிய சத்துமாவு தயாரித்தல், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா்.
இந்தப் பயிற்சியில் வேளாண் அலுவலா் சி.சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளா் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலா் க.ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலா் சுரேஷ் உள்பட 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளா் வெ.ச.திருவரங்கராஜ், உதவி தொழில் நுட்ப மேலாளா் மு.அன்பழகன் மற்றும் மே.சா.ஆதவன் ஆகியோா் செய்திருந்தனா்.