ஈரோடு

பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ 81.84 லட்சம் காணிக்கை

DIN

பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 81 லட்சத்து 84 ஆயிரத்து 831இருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

த்தியமங்கலத்தை அடுத்த அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயிலில் மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயில் துணை ஆணையா் மேனகா மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு திருக்கோயில் பணியாளா்கள், கல்லூரி பள்ளி மாணவா்கள், ராஜன் நகா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊழியா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் காணிக்கையாக ரூ. 81 லட்சத்து 84 ஆயிரத்து 831, 460 கிராம் தங்கம், 960 கிராம் வெள்ளி இருந்ததாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

140 கோடி இந்தியர்கள் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியமில்லை: மோடி!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT