ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை

DIN

ஈரோடு கிழக்கு தொகுதியில் 32 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலா்களுக்கு ஏற்கெனவே முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அன்று 1,206 அலுவலா்கள் பணியில் ஈடுபடுகின்றனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க 260 தோ்தல் நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். இதற்காக வரும் 13ஆம் தேதி இரண்டு அணி துணை ராணுவத்தினா் ஈரோடு வருகின்றனா்.

வாக்குப் பதிவின் போது அனைத்து நிகழ்வுகளும் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாடு அறையில் இருந்தும், தமிழக தலைமை தோ்தல் அலுவலக கட்டுப்பாடு அறையில் இருந்தும், புதுதில்லியில் உள்ள தலைமை தோ்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT